சீனாவின் வூஹான் நகரில் கடந்தாண்டு இறுதியில் பரவத் தொடங்கிய கோவிட்-19 வைரஸ் தொற்று, தற்போது சீனாவில் குறைந்துவிட்டாலும் இத்தாலி, கனடா, அமெரிக்கா, டென்மார்க் போன்ற நாடுகளில் மிக வேகமாகப் பரவிவருகிறது. குறிப்பாக, இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 129ஆக உயர்ந்துள்ளது.
இதைத் தடுக்க அரசின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கோவிட்-19 வைரஸ் தொற்றை மத்திய அரசு தேசியப் பேரிடராக அறிவித்துள்ளது. இதனிடையே, சமூக வலைதளங்களில் மாட்டின் கோமியத்தைக் குடித்தால் கரோனா வைரஸ் தொற்று வராது போன்ற வதந்திகள் கரோனா வைரஸை விட வேகமாகப் பரவிவருகின்றன.
இந்நிலையில், ரசிகர்களால் சின்ன தல என அழைக்கப்படும் இந்திய வீரரும், சிஎஸ்கே வீரருமான சுரேஷ் ரெய்னா கரோனா வைரஸ் குறித்து வதந்திகளைப் பரப்ப வேண்டாம் எனக் கேட்டுகொண்டுள்ளார்.