இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான தோனி இன்று தனது 39ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இவருக்கு விளையாட்டு வீரர்கள், சினிமா நடிகர்கள் உள்ளிட்ட பலரும் பிறந்தநாள் வாழ்த்து கூறிவருகின்றனர்.
'கரோனாவிடமிருந்து தப்பிக்க MSDஐ பின்பற்றுங்கள்' - மும்பை போலீஸ் - தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த மும்பை காவல்துறை
இந்திய கிரிக்கெட் வீரர் தோனிக்கு மும்பை காவல் துறை புதுவிதமான முறையில் பிறந்தநாள் வாழ்த்து கூறி ட்வீட் செய்து, பொதுமக்களிடம் கரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தியுள்ளது.
மேலும் அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தோனி குறித்து தொடர்ந்து பதிவிட்டுவருகின்றனர். இந்நிலையில், மும்பை காவல் துறை தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தோனிக்கு புதுவிதமான முறையில் பிறந்தநாள் வாழ்த்து கூறி ட்வீட் செய்து, அவரது பெயரின் முதல் எழுத்துக்களைக் கொண்டு (MSD - Maintain Social Distancing) பொதுமக்களிடம் கரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தியுள்ளது.
அந்தப் பதிவில், ”பிறந்தநாள் வாழ்த்துக்கள் கேப்டன் கூல் தோனி! கரோனாவிடமிருந்து தப்பிக்க மக்கள் தகுந்த இடைவெளியைக் கடைப்பிடித்துப் பாதுகாப்பாக இருங்கள்” என்று குறிப்பிட்டுள்ளது. நாட்டில் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று ஏழு லட்சத்தைக் கடந்துள்ளது. இதனால் இத்தொற்று தாக்கப்பட்டாமல் இருக்க பொதுமக்கள் அனைவரும் தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டிய தேவை தற்போது கட்டாயமாகியுள்ளது.