தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் - தினேஷ் கார்த்திக் - தினேஷ் கார்த்திக்

அனுமதி பெறாமல் ஒப்பந்த விதிமுறையை மீறி கரீபியன் ப்ரீமியர் லீக் தொடரில் கலந்துகொண்டதற்காக, பிசிசியிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

DK

By

Published : Sep 8, 2019, 3:55 PM IST

வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்றுவரும் கரீபியன் டி20 லீக் தொடரில் டிரின்பகோ நைட் ரைடர்ஸ் அணி விளையாடிவருகிறது. இந்த அணி ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளர் நடிகர் ஷாருக்கானின் சொந்த அணியாகும். அந்த அணியின் முதல் போட்டியைக் காண இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் சென்றார். அப்போது அந்த அணியின் ஓய்வறையில், அவர் டிரின்பகோ அணியின் பயிற்சியாளர் மெக்கல்லத்துடன் இருந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது.

தினேஷ் கார்த்திக்

பிசிசிஐயால் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள ஒரு வீரர், அவர்களது அனுமதி இல்லாமல் வேறொரு நாட்டில் நடைபெறும் லீக்குக்கு செல்லக் கூடாது. இந்த விதிமுறையை தினேஷ் கார்த்திக் மீறியதால், இது குறித்து விளக்கம் அளிக்குமாறு பிசிசிஐ அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது.

இந்நிலையில், இது குறித்து தினேஷ் கார்த்திக் கூறுகையில், "நான் எந்தத் திறனிலும் டிரின்பகோ நைட் ரைடர்ஸ் அணியில் பங்கேற்கவில்லை. அந்த அணியின் பயிற்சியாளர் மெக்கல்லம் எனக்கு அழைப்பு விடுத்ததால் நான் அங்கு சென்றேன்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் என்கிற முறையில் நான் அங்கு சென்றால் அது தனக்கு உதவும் என அவர் நினைத்தார். ஏனெனில், அவர் டிரின்பகோ நைட் ரைடர்ஸ் அணி மட்டுமல்லாமல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பயிற்சியாளரும்கூட. அதனால், கொல்கத்தா அணி தொடர்பாக நாங்கள் இருவரும் ஆலோசனை செய்தோம்.

அவரது அணியின் முதல் போட்டி செப்டம்பர் நான்காம் தேதி நடைபெற்றது. எனக்கு விடுக்கப்பட்ட அழைப்பிற்காக நான் அங்குச் சென்று, அவர்களது ஜெர்சியை அணிந்துகொண்டு போட்டியை ஓய்வறையில் கண்டேன். பிசிசிஐயின் முதல் ஒப்பந்த விதிமுறையை மீறியதால், நான் பிசிசியிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details