கேரள மாநிலம், பாலக்காடு பகுதியில் கர்ப்பிணி யானை ஒன்றுக்கு, அன்னாசி பழத்தில் வெடிமருந்துகள் வைத்து சாப்பிட கொடுத்ததில் யானை உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் யானையின் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் குரல் கொடுத்து வருகின்றனர்.
'இது அரக்கத்தனமான செயல்' -கெவின் பீட்டர்சன் - கேரளா யானை விவகாரம்
கேரளாவில் கர்ப்பிணி யானைக்கு அன்னாசிப்பழத்தில் வெடியை வைத்து உணவளித்த மனிதாபிமானமற்ற சம்பவம் குறித்து இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், விலங்கு ஆர்வலருமான கெவின் பீட்டர்சன் தனது வெறுப்பை சமூக வலைதளத்தில் வெளிப்படுத்தியுள்ளார்.
Disgusted with images sent from India: KP on elephant incident
இந்நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரும் விலங்கு ஆர்வலருமான கெவின் பீட்டர்சன் தனது இன்ஸ்டாகிராம் பதிவில், ‘இந்தியாவிலிருந்து சமூக வலைதளங்களில் வைரலான புகைப்படத்தை பார்த்தேன். இது மிகவும் அரக்கத்தனமான விஷயம். அந்த கர்ப்பிணி யானையை இவர்கள் ஏன் இப்படி செய்தர்கள்?' என்று கேள்வி எழுப்பியுள்ளார்.