உலகக் கோப்பை தொடர் 40ஆவது லீக் போட்டி எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெறுகிறது. வங்கதேசம்-இந்தியா மோதும் இன்றைய போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் அரை இறுதிக்கு முன்னேறும். முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
15 ஆண்டு கனவு... உலகக் கோப்பையில் களமிறங்குகிறார் தினேஷ் கார்த்திக்!
உலகக் கோப்பை தொடரில் வங்கதேசத்துக்கு எதிரான இன்றைய போட்டியில் தினேஷ் கார்த்திக் விளையாடுகிறார் என்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விரோட் கோலி தெரிவித்துள்ளார்.
இந்திய அணி 7 போட்டிகளில் 5 போட்டிகளில் வெற்றி பெற்று, ஒரு போட்டியில் தோல்வியும், மற்றொன்று போட்டி மழையால் கைவிடப்பட்டது. வங்கதேசம் மூன்று போட்டியில் வெற்றியும், மூன்று போட்டியில் தோல்வியும், ஒரு போட்டி மழையால் கைவிடப்பட்டது. இப்போட்டியில் வங்கதேச அணி, இந்தியா அணியை வீழ்த்தியே ஆக வேண்டிய நிலையில் உள்ளது.
இப்போட்டியில் குல்தீப், கேதர் ஜாதவ் ஆகியோருக்கு பதிலாக தினேஷ் கார்த்திக், புவனேஷ்வர்குமார் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்திய அணியில் முதல் முதலாக தினேஷ் கார்த்திக் களம் இறங்க உள்ளார். அவர் கிரிக்கெட் ஆட வந்து 15 ஆண்டுகளில், தற்போதுதான் முதல் முறையாக உலகக்கோப்பை போட்டியில் ஆடுகிறார். இந்தத் தொடரில் ஏழு ஆட்டங்களில் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இந்தப் போட்டியில் தினேஷ் கார்த்திக் ஆடுவது, அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.