தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

மீண்டும் அணிக்கு கேப்டனான தினேஷ் - கொண்டாட்டத்தில் ரசிகர்கள்! - இந்திய அணியின் சர்வதேச வீரர்களான முரளி விஜய், ரவிசந்திரன் அஸ்வின்

இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான தினேஷ் கார்த்திக், உள்ளூர் டி20 கிரிக்கெட் தொடரான சயீத் முஷ்டாக் அலி கோப்பைக்கான தமிழ்நாடு அணியை வழிநடத்துவாரென தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

TCSA dinesh karthik

By

Published : Oct 30, 2019, 10:45 AM IST

இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெற்றுவரும் உள்ளூர் டி20 கிரிக்கெட் தொடரானா சயீத் முஷ்டாக் அலி கோப்பை, இந்தாண்டு கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நவம்பர் 8ஆம் தேதி தொடங்குகிறது. இத்தொடருக்கான தமிழக அணி, தமிழ்நாடு கிரிக்கெட் வாரியத்தால் நேற்று வெளியிடப்பட்டது.

அந்த அறிவிப்பில், விஜய் ஹாசாரே தொடரில் தமிழக அணியை வழிநடத்திய விக்கெட் கீப்பரான தினேஷ் கார்த்திக், இத்தொடரிலும் அணியை தலமை தாங்குவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அணியின் ஆல் ரவுண்டரான விஜய் சங்கர் அணியின் துணைக்கோப்டனாக செயல்படுவார் எனவும் அறிவிக்கப்பட்ள்ளது.

மேலும், இந்திய அணியின் சர்வதேச வீரர்களான முரளி விஜய், ரவிசந்திரன் அஸ்வின் ஆகியோரும் தமிழக அணியில் இடம்பிடித்துள்ளனர். மற்றொரு ஆல் ரவுண்டரான வாஷிங்டன் சுந்தர் இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் முடிந்ததும் தமிழக அணியில் இணைவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சயீத் முஷ்டாக் அலி கோப்பைக்கான தமிழக அணி:

தினேஷ் கார்த்திக் (கே), விஜய் சங்கர், முரளி விஜய், என். ஜெகதீசன், ஹரி நிஷாந்த், பாபா அபராஜித், ஷாருக் கான், ரவிச்சந்திரன் அஸ்வின், முருகன் அஸ்வின், சாய் கிஷோர், நடராஜன், பெரியசுவாமி, விக்னேஷ், எம். முகமது, கௌஷிக், வாஷிங்டன் சுந்தர்.

சமீபத்தில் நடைபெற்ற விஜய் ஹாசாரே தொடரில், தினேஷ் கார்த்திக் தலைமையிலான தமிழக அணி, இறுதி போட்டியில் - கர்நாடக அணியிடம் 60 ரன்கள் வித்தியாசத்தில் தொல்வியடைந்து இரண்டாமிடம் பிடித்தது.

இதையும் படிங்க: #VijayHazare: தமிழ்நாட்டின் வெற்றியைத் தடுத்த மழை

ABOUT THE AUTHOR

...view details