மார்ச் 8ஆம் தேதி வங்கதேச கிரிக்கெட் அணியின் கேப்டன் மோர்டசா சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றார். இதையடுத்து வங்கதேச அணியின் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான கேப்டனாக தமீம் இக்பால் அறிவிக்கப்பட்டார்.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய தமீம் இக்பால், ''மோர்டசா எப்போதும் எனக்கு மிகவும், நெருங்கிய நண்பர். இருவரும் இணைந்து நிறைய கிரிக்கெட் ஆடியிருக்கிறோம். அவர் என்ன யோசிப்பார் என்பதை நிச்சயம் என்னால் கணிக்க முடியும். ஆனால் அவர் மேற்கொண்ட கேப்டன்சி பணியை நிரப்புவது எளிதல்ல. அவரிடமிருந்து அனைத்து நல்ல விஷயங்களையும் எடுத்துக்கொள்கிறேன். நான் கிரிக்கெட்டில் ஏதாவது கடினமாகக் கருதினால், என்னுடைய முதல் அழைப்பு அவருக்கு தான் செல்லும்.