தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

'எங்களிடம் போதிய பணம் இல்லாததால் எங்களால் அதிக வீரர்களை எடுக்க முடியவில்லை' - சிஎஸ்கே பயிற்சியாளர் ஃப்ளெமிங்! - சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃப்ளெமிங்

நேற்று நடைபெற்ற ஐபிஎல் 13ஆவது சீசனுக்கான வீரர்கள் ஏலத்தில் எங்களிடம் போதிய பணம் இல்லாததால் நாங்கள் சில வீரர்களை வாங்கமுடியவில்லை என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃப்ளெமிங் தெரிவித்துள்ளார்.

Dictated by others' need, CSK relied on waiting game: Fleming
Dictated by others' need, CSK relied on waiting game: Fleming

By

Published : Dec 20, 2019, 4:55 PM IST

இந்தியாவில் அடுத்த ஆண்டு தொடங்கவுள்ள ஐபிஎல் டி20 தொடருக்கான வீரர்களுக்கான ஏலம் நேற்று கொல்கத்தாவில் நடைபெற்றது. இந்த ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம் கர்ரன், பியூஷ் சாவ்லா, சாய் கிஷோர், ஹசில்வுட் ஆகியோரை வாங்கியது.

இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த சிஎஸ்கே அணியின் தலமைப் பயிற்றியாளர் ஃப்ளெமிங், நாங்கள் இந்த நான்கு வீரர்களை வாங்கியதன் மூலம் எங்கள் அணியின் பந்துவீச்சு தரத்தை உயர்த்தியுள்ளோம். ஏனெனில் சாம் கர்ரன், ஜோஷ் ஹசில்வுட் ஆகியோர் வேகப்பந்துவீச்சில் அணிக்கு மேலும் பலத்தை சேர்கின்றனர் என தெரிவித்தார்.

மேலும், பியூஷ் சாவ்லாவை ரூ.6.50 கோடிக்கு வாங்கியுள்ளது சரியான விலையே. ஏனெனில் அவர் மூன்று முறை சாம்பியன் பட்டம் வென்ற அணியில் பயணித்துள்ளார். மேலும் அவரின் பந்துவீச்சினால் எதிரணி வீரர்களை தடுமாற செய்வதில் வல்லவர் என தெரிவித்துள்ளார்.

பியூஷ் சாவ்லா

தொடர்ந்து பேசிய அவர், எங்களிடம் வெறும் ரூ.14.60 கோடியே இருப்பு இருந்தது. இதனால் தான் எங்களால் அதிக வீரர்களை ஏலத்தில் எடுக்க முடியவில்லை என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: கிறிஸ் லின்னிற்கு பும்ரா அளித்த ஷாக் ரிப்ளை!

ABOUT THE AUTHOR

...view details