கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஐபிஎல் தொடர் இந்தாண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்த மாதம் 19ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இந்நிலையில், இத்தொடரில் பங்கேற்பதற்காக 8 அணிகளை சேர்ந்த வீரர்கள் கடந்த வாரம் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்றனர்.
இந்நிலையில், சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னா தனிப்பட்ட காரணங்களுக்காக இந்தாண்டு ஐபிஎல் தொடரிலிருந்து விலகி சொந்த ஊர் திரும்பினார். இதையடுத்து, சிஎஸ்கே அணியில் மூன்றாமிடத்தில் யார் களமிறங்குவார் என்ற கேள்வி பலரது மனதில் எழத் தொடங்கியது.
இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில், ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி மூன்றாவது இடத்தில் களமிறங்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.