இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பை ஒருநாள் தொடருக்குப் பின், இந்திய அணியின் முன்னாள் கேப்டனான தோனியை களத்தில் பார்ப்பதை விட சமூக வலைதளங்களில்தான் அதிகம் பார்க்க முடிகிறது. அத்தொடருக்குப் பின் எவ்வித போட்டியிலும் அவர் பங்கேற்காமல் உள்ளதால், அவரது ஓய்வு குறித்து பலரும் பலவிதமான கருத்துகளைத் தெரிவித்துவருகின்றனர்.
இதனிடையே, ஓய்வு குறித்து ஜனவரி மாதம் வரை எதுவும் கேட்க வேண்டாம் என தோனி தெரிவித்திருந்தார். இந்நிலையில், தோனி தனது மகள் ஸிவா கையில் கிட்டார் வாசித்தபடி பாட்டு பாடிய வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.