தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

மாலத்தீவில் பானிப்பூரி விற்கும் தோனி! - பானிப்பூரி விற்கும் தோனி

மாலத்தீவில் தனது குடும்பத்துடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, ஆர்.பி.சிங்கிற்கு பானிப்பூரி பரிமாறிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

MSD in new Avatar; becomes panipuriwala
MSD in new Avatar; becomes panipuriwala

By

Published : Feb 5, 2020, 11:00 PM IST

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் சிறந்த கேப்டன்களில் ஒருவராக திகழ்ந்த தோனி, இந்திய அணிக்காக களமிறங்கி ஆறு மாதங்கள் கடந்துவிட்டது. கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடருக்கு பிறகு அவர் இந்திய அணியில் இடம்பிடிக்காமல் தனது குடும்பத்துடன் நேரத்தை செலவழித்துவருகிறார்.

இதனால், இந்திய அணி விளையாடும் போட்டிகளில் மிஸ் யூ தோனி என்ற பேனருடன் ரசிகர்கள் வலம்வருகின்றனர். பலரும் தனது எதிர்காலம் குறித்து பலவிதமான கருத்துகளை தெரிவித்துவந்தாலும், அவர் தனது குடும்பத்துடன் நேரத்தை செலவழிப்பதில் கவனம் செலுத்திவருகிறார். அந்த வகையில், தற்போது மாலத்தீவில் தனது குடும்பத்துடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தோனி, சக நண்பர்களுடன் கடற்கரை ஓரத்தில் வாலிபால் விளையாடும் வீடியோ வைரலானது.

இந்நிலையில், முன்னாள் இந்திய பந்துவீச்சாளரான ஆர்.பி. சிங்கிற்கு அவர் பானிப்பூரி பரிமாறும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. மேலும் அந்த வீடியோவில் சிஎஸ்கே அணிக்காக ஐபிஎல் ஏலத்தில் தேர்வுசெய்யப்பட்ட பியூஷ் சாவ்லாவும் உடனிருந்தார்.

இதையும் படிங்க:டெய்லர் மிரட்டல் சதம்... சேஸிங்கில் புதிய சாதனை படைத்த பிளாக்கேப்ஸ்!

ABOUT THE AUTHOR

...view details