உலகக்கோப்பைத் தொடர் முடிவடைந்ததில் இருந்து தோனியின் ஓய்வு குறித்து பல்வேறு கருத்துகள் வந்த வண்ணம் இருந்தன. இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளப் போகும் இந்திய அணியில், தோனி இடம்பெறுவாரா? மாட்டாரா? என்ற கேள்விக்கு அவரே பதிலளித்துள்ளார். பிசிசிஐ-க்கு கடிதம் ஒன்றை தோனி அனுப்பியுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.
ஓய்வு குறித்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த தோனி! - bcci
மும்பை: இரண்டு மாதங்கள் பாதுகாப்புப்படை பணியில் ஈடுபட இருப்பதால், வெஸ்ட் இண்டீஸ் தொடரில் தன்னால் பங்கேற்க இயலாது என, கிரிக்கெட் வீரர் தோனி பிசிசிஐ-க்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், இரண்டு மாதங்களுக்கு பாதுகாப்புப்படை பணியில் ஈடுபடப் போவதால் தன்னால் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் பங்கேற்க இயலாது என்று தோனி கூறியுள்ளதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தற்போது தோனி ஓய்வு குறித்து எதுவும் கூறவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி நாளை அறிவிக்க உள்ளதால், தோனிக்கு பதிலாக இளம் வீரர் ரிஷப் பந்த் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது. உலகக்கோப்பையில் ஷிகர் தவானுக்கு மாற்று வீரராக ரிஷப் பந்த் களமிறக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.