12-வது ஐபிஎல் சீசன் போட்டிகள் மார்ச் 23-ஆம் தேதி தொடங்கும் நிலையில், சென்னை-பெங்களூரு அணிகள் மோதும் முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்நிலையில், இதுவரை நடந்து முடிந்த ஐபிஎல் போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்த இந்திய வீரர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. அதில் சென்னை அணி கேப்டன் 'தல' தோனி 186 சிக்ஸர்களுடன் முதல் இடத்திலும், சென்னை அணியின் 'சின்னதல' ரெய்னா 185 சிக்ஸர்கள் அடித்து இரண்டாவது இடத்திலும், 184 சிக்ஸர்கள் பறக்கவிட்டு மும்பை அணியின் கேப்டன் 'ஹிட்மேன்' ரோஹித் சர்மா மூன்றாவது இடத்தில் உள்ளார்.
ஐபிஎல்-லில் 200-வது சிக்ஸரை நெருங்கும் தல தோனி! - 200 sixes
டெல்லி : ஐபிஎல் தொடரின் இந்த சீசனில், 200-வது சிக்ஸர் என்ற மைல்கல் சாதனையை சென்னை அணி கேப்டன் தோனி உள்ளிட்ட மூன்று இந்திய வீரர்கள் படைக்க உள்ளனர்.
தல தோனி.
இந்த மூவரும் 200 சிக்ஸர்களை நெருங்கியுள்ளதால், முதலாவதாக 200 சிக்ஸர்கள் அடிக்கப்போகும் இந்திய வீரர் யார் என கேள்வி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.