தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

'ஐபிஎல் தொடரை வைத்தே தோனிக்கு இடம்' - கறாரான ரவி சாஸ்திரி!

2020ஆம் ஆண்டு நடக்கவுள்ள ஐபிஎல் தொடரில் தோனியின் ஆட்டத்தைப் பொறுத்தே அடுத்த ஆண்டு, ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பையில் தோனி இடம்பெறுவது குறித்து தீர்மானிக்கப்படும் என இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.

dhoni-comeback-depends-on-2020-ipl-ravi-shastri
dhoni-comeback-depends-on-2020-ipl-ravi-shastri

By

Published : Nov 27, 2019, 9:07 AM IST

இந்த ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பைத் தொடரின் அரையிறுதி தோல்விக்குப் பிறகு, நட்சத்திர வீரர் தோனி கிரிக்கெட்டிலிருந்து விலகியேயிருக்கிறார். இதனால் தோனி ஓய்வை அறிவிக்கப்போகிறார் என்று பரவலாகப் பேசப்படுகிறது. ஆனால், தோனி ரசிகர்களோ அடுத்த ஆண்டு நடக்கவுள்ள டி20 உலகக்கோப்பையில் தோனி ஆடுவார் என பதிலளித்து வருகின்றனர். இதுவரை தோனி எது பற்றியும் பேசாமல் மெளனம் காத்து வருகிறார்.

இந்நிலையில் இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி இந்திய அணியில் தோனியின் இடம் குறித்துப் பேசியுள்ளார். அதில், ' தோனி தனது பயிற்சியை எப்போது மீண்டும் தொடங்கப்போகிறார் என்பதைப் பொறுத்தும், 2020ஆம் ஆண்டின் ஐபிஎல் தொடரில் வெளிப்படுத்த இருக்கும் ஆட்டத்தைப் பொறுத்தும் தான் தோனியின் இடம் முடிவு செய்யப்படும்.

அதுவரையிலும் அனைவரும் அமைதி காக்க வேண்டும். ஐபிஎல் தொடருக்குப் பிறகு 2020ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ள உலகக்கோப்பைத் தொடரில் ஆடும் சிறந்த 17 வீரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்' எனத் தெரிவித்துள்ளார்.

இதனிடையே தோனி அடுத்த மாதம் நடக்கவுள்ள வெஸ்ட் இண்டீஸ் தொடரில் பங்கேற்கவுள்ளார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: தோனியின் புதிய கார் - வைரலாகும் புகைப்படம்

ABOUT THE AUTHOR

...view details