நீண்ட நாள் ஓய்வுக்குப் பிறகு இந்திய அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவான் இந்திய அணிக்கு திரும்பியுள்ளார். இலங்கை அணிக்கு எதிராக நேற்று நடைபெறவிருந்த முதல் டி20 போட்டியில் ஷிகர் தவான் களமிறங்க வேண்டிய நிலையில், பிட்ச்சின் ஈரத்தால் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில், தொடக்க வீரர் ஷிகர் தவான் அணிக்கு திரும்பியுள்ளது குறித்து பேசுகையில், ‘கடந்த ஆண்டு அதிகமான காயங்களால் தவித்துவந்தேன். விளையாட்டில் அதுவும் ஒரு அங்கம் தான். இந்த வருடத்தை மிகவும் எதிர்நோக்கியுள்ளேன். முக்கியமாக நடக்கவுள்ள டி20 உலகக்கோப்பைத் தொடரில் இந்திய அணிக்காக பங்கேற்று உலகக்கோப்பையைக் கைப்பற்றுவதே எனது குறிக்கோள்’ என்றார்.