கோவிட்-19 பெருந்தொற்றின் அச்சுறுத்தல் காரணமாக இம்மாதம் நடைபெறவிருந்த ஐபிஎல் தொடர், தற்போது காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் விளையாட்டு வீரர்கள் தங்களது குடும்பத்தினருடன், சமூக வலைதளத்திலும் நேரத்தை செலவிட்டு வருகின்றனர்.
மேலும் ஒரு சிலர் சமையல் செய்வது, பாட்டு எழுதுவது, உடற்பயிற்சிகளை மேற்கொள்வது என தங்களது வேறு திறமைகளையும் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளிக்காட்டுவது உண்டு.
தற்போது ஷிக்கர் தவான் தனது மகனுடன் இணைந்து ‘குவாரண்டைன் பிரீமியர் லீக்’ (Quarantine Premier League ) என்ற பெயரில், வீட்டினுள்ளே கிரிக்கெட்டை விளையாடத் தொடங்கியுள்ளார்.
இதுகுறித்து தவான் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘குவாரண்டைன் பிரீமியர் லீக்’ விளையாட இதுவே சிறந்த தருணம். இது தவான் vs தவானுக்கு இடையே புன்னகையுடன் நடக்கும் ஒரு தருணமாகும்’ என்று பதிவிட்டு, வீட்டினுள் வர்ணனையுடன் கூடிய கிரிக்கெட் விளையாடும் காணொலியையும் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க:‘டாடி கூல்’ பாடலுக்கு மகனுடன் கூலாக நடனமாடி அசத்தும் தவான் !