தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 9, 2019, 1:05 PM IST

ETV Bharat / sports

குட்டி ரசிகையை சந்தோஷப்படுத்திய வெஸ்ட் இண்டீஸ் வீரர்!

திருவனந்தபுரம்: நான்கு வயது குட்டி ரசிகைக்காக டிக்கெட்டுகள் பரிசளித்த வெஸ்ட் இண்டீஸ் வீரர் தினேஷ் ராம்தீனின் செயல் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

denesh-ramdin-shows-beautiful-gesture-to-4yr-old-fan
denesh-ramdin-shows-beautiful-gesture-to-4yr-old-fan

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய இரண்டாவது டி20 போட்டி திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் பங்கேற்பதற்காக வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் மைதானத்திற்கு வரும் வழியில், நான்கு வயது குட்டி ரசிகையை சந்தித்து வெஸ்ட் இண்டீஸ் வீரர் தினேஷ் ராம்தீன் இரண்டு டிக்கெட்டுகளை பரிசளித்துள்ளார்.

இதன் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியான நிலையில், இந்த சம்பவம் இந்திய ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.

குட்டி ரசிகையுடன் தினேஷ் ராம்தீன்

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு வாழ்வா சாவா எனப் பார்க்கப்பட்ட இந்த இரண்டாவது டி20 போட்டியில், 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இந்த அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 போட்டி வரும் 11ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதில் வெற்றிபெறும் அணி தொடரைக் கைப்பற்றும் என்பதால், அந்த போட்டி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இதையும் படிங்க: விக்கெட் எடுத்த மகிழ்ச்சியில் மேஜிக் செய்த தென் ஆப்பிரிக்க வீரர்!

ABOUT THE AUTHOR

...view details