ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் நேருக்கு நேர் மோதின. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் வைத்து நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி கொல்கத்தா அணியின் ஜோய் டென்லி மற்றும் சுப்மேன் கில் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில் டென்லி, இஷாந்த் சர்மா வீசிய முதல் பந்திலேயே போல்ட் ஆகி வெளியேறி கொல்கத்தா அணிக்கு அதிர்ச்சி தந்தார். இதையடுத்து மைதானத்தில் நுழைந்த உத்தப்பா, சுப்மேன் கில்லுடன் இணைந்து பொறுப்பான ஆட்டத்தில் ஈடுபட்டார்.
டெல்லி அணியினரின் பந்து வீச்சை மிக சுலபமாக எதிர்கொண்ட இந்த ஜோடி, பந்தை அவ்வப்போது பவுண்டரிக்கும், சிக்சருக்கும் விரட்டி ரசிகர்களை குதூகலப்படுத்தியது.
இதனிடையே டெல்லி அணி 63 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ராபின் உத்தப்பா (28 ரன்கள்) கீமோ பால் பந்துவீச்சில் கேட்ச் ஆகி வெளியேறினார். இதன்பின்னர் களமிறங்கிய வீரர்களும் மந்தமான ஆட்டத்தை வெளிபடுத்த, சுப்மேன் கில் மட்டும் அரை சதத்தை கடந்து கொல்கத்தா அணிக்கு ஆறுதல் அளித்தார்.