டி10 லிக் இரண்டாவது சீசன் ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற இரண்டாவது லீக் ஆட்டத்தில் ஷேன் வாட்சன் தலைமையிலான டெக்கான் கிளாடியேட்டர்ஸ் அணி, இயான் மோர்கன் தலைமையிலான டெல்லி புல்ஸ் அணியை எதிர்கொண்டது.
இந்தப்போட்டியில் முதலில் டாஸ் வென்ற டெல்லி புல்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய டெக்கான் அணியின் கேப்டன் வாட்சன் அதிரடியாக விளையாடி டி10 கிரிக்கெட் போட்டியில் தனது மூன்றாவது அரைசத்தை பதிவு செய்தார்.
இதன் மூலம் டெக்கான் அணி 10 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 102 ரன்களை சேர்த்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஷேன் வாட்சன் 57 ரன்களை குவித்தார்.