டி10 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெற்றுவருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 12ஆவது லீக் ஆட்டத்தில் திசாரா பெரேரா தலைமையிலான பங்களா டைகர்ஸ் அணி, இயன் மோர்கன் தலைமையிலான டெல்லி புல்ஸ் அணியை எதிர்கொண்டது.
இந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்ற பங்களா டைகர்ஸ் அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய பங்களா அணி ஆரம்பம் முதலே சொற்ப ரன்களில் வீரர்களின் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இதனால் பங்களா அணி 10 ஓவர்கள் முடிவில் ஏழு விக்கெட் இழப்பிற்கு 108 ரன்களை எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ரோஸ்ஸோ 27 ரன்களை எடுத்தார். பின் இலக்கை நோக்கிக் களமிறங்கிய டெல்லி புல்ஸ் அணிக்கு குசால் பெரேரா அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தார்.