கிரிக்கெட் போட்டிகளின் அடுத்த பரிணாமமான டி10 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெற்றுவருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 10ஆவது லீக் ஆட்டத்தில் ஹாசிம் ஆம்லா தலைமையிலான கர்நாடக டஸ்கர்ஸ் அணி, ஷேன் வாட்சன் தலைமையிலான டெக்கான் கிளாடியேட்டர் அணியை எதிர்கொண்டது.
இந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்ற டெக்கான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய டஸ்கர்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் ஜான்சன் சார்லஸ்-எவின் லீவிஸ் இணை அதிரடியான தொடக்கத்தை தந்தது. அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் ஆம்லாவும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இதன்மூலம் டஸ்கர்ஸ் அணி 10 ஓவர்கள் முடிவில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 110 ரன்களை எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக சார்லஸ் 35 ரன்களையும் ஹாசிம் ஆம்லா 32 ரன்களையும் சேர்த்தனர். பின் இலக்கை நோக்கி களமிறங்கிய டெக்கான் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியளிக்கும் விதத்தில் கேப்டன் வாட்சன் முதல் பந்திலும் தேவ்சிச் 5 ரன்களிலும் வெளியேறினர்.