கிரிக்கெட் வரலாற்றின் அடுத்த பரிமானமான டி10 கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு நாடுகளில் தற்போது நடைபெற்று வருகின்றது. இதில் இன்று அபிதாபியில் நடைபெற்ற நான்காவது லீக் ஆட்டத்தில் வாட்சன் தலைமையிலான டெக்கான் கிளாடியேட்டர்ஸ் அணி, திசாரா பெரேரா தலைமையிலான பங்களா டைகர்ஸ் அணியை எதிர்கொண்டது.
இதில் முதலில் டாஸ் வென்ற டெக்கான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய பங்களா அணி காெலின் இங்கிராம், ரோஸ்ஸோ அதிரடியால் 10 ஓவர்கள் முடிவில் ஐந்து விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 108 ரன்களை எடுத்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக கோலின் இங்கிராம் 37 ரன்களையும், ரோஸ்ஸோ 26 ரன்களையும் எடுத்தனர். டெக்கான் அணி சார்பில் பிரிட்டோரியஸ் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார்.