தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

பிக் பாஷ் அதிரடியில் அறிமுகமாகும் டி வில்லியர்ஸ்! - கிரிக்கெட் செய்திகள்

பிரிஸ்பேன்: பிக் பாஷ் தொடரில் அடிலெய்ட் ஸ்ட்ரைக்கர்ஸ் அணிக்காக அறிமுகமாகவுள்ளது பற்றி டி வில்லியர்ஸ் மனம் திறந்துள்ளார்.

de-villiers-confident-of-good-show-in-maiden-bbl-stint
de-villiers-confident-of-good-show-in-maiden-bbl-stint

By

Published : Jan 13, 2020, 10:20 PM IST

இந்த ஆண்டு நடைபெற்று வரும் பிக் பாஷ் லீக் தொடரில் தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் டி வில்லியர்ஸ் அடிலெய்ட் ஸ்ட்ரைக்கர்ஸ் அணிக்காக அறிமுகமாகவுள்ளது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அவர் பேசுகையில், ''நான் எனது கிரிக்கெட் வாழ்வின் சிறந்த ஃபார்மில் உள்ளேன். அதனை இந்தத் தொடரில் அதிகமாக வெளிப்படுத்துவேன் என நம்புகிறேன்.

எதற்காக அடிலெய்ட் அணிக்கு நான் தேவைப்படுகிறேன் என என்னால் கூற முடியாது. ஆனால் இதுவரை அடிலெய்ட் ஸ்ட்ரைக்கர்ஸ் அணி சில சிறந்த ஆட்டங்களை வெளிப்படுத்தியுள்ளது. டாம் பாண்டன் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அதேபோன்ற ஒரு ஆட்டத்தை தான் மிடில் ஆர்டரில் நான் வெளிப்படுத்தவேண்டும்'' என்றார்.

கிறிஸ் லின் பற்றி பேசுகையில், '' ஐபிஎல் தொடரின்போது சிலமுறை அவரிடம் பேசியுள்ளேன். நாங்கள் இருவரும் ஒரே நேரத்தில் பேட்டிங் செய்வது எப்படி இருக்கும் என எதிர்பார்த்துள்ளேன். எந்தத் தொடரில் விளையாடினாலும் சில நேரங்களில் வேண்டுமென்றே அழுத்தத்தை ஏற்படுத்திக்கொள்வேன். அந்த அழுத்தம் எனது ஆட்டத்தை மேம்படுத்தும்'' எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: எனது பேட்டிங் மாற்றத்திற்கு இவரே காரணம்: சேவாக்

ABOUT THE AUTHOR

...view details