மெல்போர்னில் நடைபெற்றுவரும் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று (டிச. 28) நடைபெற்றது. இதில் 277 ரன்களுடன் தனது மூன்றாம் நாள் ஆட்டத்தைத் தொடங்கிய இந்திய அணிக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் நேற்றைய தினம் சதமடித்து அசத்திய கேப்டன் ரஹானே 112 ரன்கள் எடுத்திருந்த நிலையில் எதிர்பாராதவிதமாக ரன் அவுட்டாகி ஆட்டமிழந்தார்.
இருப்பினும் ரஹானேவின் ரன் அவுட்டிற்கு காரணமான ரவீந்திர ஜடேஜா மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்தார். அதன்பின் அஸ்வின் 14 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்ப, ஜடேஜாவும் 57 ரன்களில் ஸ்டார்க் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.