தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

'உலகக்கோப்பைத் தோல்வி... டி வில்லியர்ஸ், கோலி... ': மனம் திறந்த வார்னர், வில்லியம்சன்!

சிட்னி: சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் வார்னர், வில்லியம்சன் ஆகிய இருவரும் தங்களுக்குப் பிடித்த பேட்ஸ்மேன்களை சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளனர்.

david-warner-and-kane-williamson-reveal-their-list-of-best-batsmen
david-warner-and-kane-williamson-reveal-their-list-of-best-batsmen

By

Published : Apr 26, 2020, 12:54 PM IST

கரோனா வைரஸ் காரணமாக ஐபிஎல் கிரிக்கெட் தொடர், காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் தங்களது குடும்பத்துடன் நேரம் செலவிட்டும், ரசிகர்களின் கேள்விக்குப் பதிலளித்தும் நாள்களைக் கடத்தி வருகின்றனர். அதில் டேவிட் வார்னர் ஒவ்வொரு நாளும் செய்யும் டிக் டாக் வீடியோக்கள், நேர்காணல்கள் என அனைத்தும் ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றன.

இதனிடையே நேற்று ஹைதராபாத் அணியின் கேப்டன் வார்னர், அந்த அணியின் வில்லியம்சன் இருவரும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உரையாடினர். அதில் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன் யார் என்ற கேள்வியைச் சுற்றி உரையாடல் சென்றது.

அதில் வில்லியம்சன் பேசுகையில், ' தற்போதைய கிரிக்கெட்டில் தலைசிறந்த பேட்ஸ்மேன் என ஒருவரை மட்டும் கூறுவது மிகவும் கடினம். டி வில்லியர்ஸ் எப்போதும் ஸ்பெஷலான வீரர். ஆனால், அவர் இப்போது டி20 கிரிக்கெட் தொடர்களில் மட்டுமே பங்கேற்று வருகிறார்.

அதேபோல் விராட் கோலியும் மூன்று விதமான கிரிக்கெட்டிலும் ஆதிக்கம் செலுத்த விரும்புவது பார்ப்பதற்கு அழகாக உள்ளது. அவரிடமிருந்து கற்றுக்கொள்ள முடிகிறது. கிரிக்கெட் வீரர்களுக்கான தகுதியை அவர் அதிகமாகவே உயர்த்தியுள்ளார்' என்றார்.

இதனைப் பற்றி வார்னர் பேசுகையில், ' எனது வாழ்வு முழுக்க கிரிக்கெட் ஆடவேண்டும் என்றால், நான் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித்தையும் இந்தியாவின் விராட் கோலியையும் தேர்வு செய்வேன் ' என்றார்.

தொடந்து ' 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடரில் ஏற்பட்ட தோல்வி' பற்றி, வார்னர் வில்லியம்சனிடம் கேட்டார். அதற்குப் பதிலளித்த வில்லியம்சன், ' அது மிகவும் உணர்ச்சிகரமான தருணம். ஆனால், அந்த நேரத்தில் உணர்ச்சிவசப்படக் கூடாது. நமது கைகளுக்கு உட்பட்டு, சில விஷயங்கள் நடக்கவில்லை என்றால், நாம் அடுத்ததாக என்ன செய்யப்போகிறோம் என சிந்திக்க வேண்டும்.

ஒவ்வொரு கிரிக்கெட் போட்டியிலும் நாம் இதுபோன்ற தருணங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். ஆனால், உலகக்கோப்பையைப் பொறுத்தவரையில், நான் ஆடியது பெருமையாக இருந்தது.

உலகக்கோப்பை இறுதிப்போட்டியின் போது, மைதானத்தின் தன்மைகள் எப்படி மாறின என அனைவரும் பார்த்தோம். 230 முதல் 240 ரன்கள் எடுத்தால் நிச்சயம் ஈடுகொடுக்க முடியும். அதனை சரியாக செய்தோம். தொடர்ந்து சிறப்பாகவே பந்துவீசினோம்.

அந்தப் போட்டிக்குப் பின், நாங்கள் சிறப்பாக ஆடியதால், யாரையும் குற்றம்சாட்ட விரும்பவில்லை. ஏனென்றால், எங்களின் கட்டுப்பாட்டுக்குள் இருந்து வெளியே உள்ள விஷயங்களால் உலகக்கோப்பை முடிவு செய்யப்பட்டது ' என்றார்.

இதையும் படிங்க:ஐபிஎல் தொடரைப் பார்வையாளர்களின்றி நடத்துவதே சிறந்த வழி - ஹர்திக் பாண்டியா!

ABOUT THE AUTHOR

...view details