அமெரிக்காவில் ஜார்ஜ் ஃப்ளாய்ட் உயிரிழப்புக்கு பின் உலகம் முழுவதும் Black Lives Matter என்ற கோஷத்துடன் பல்வேறு தரப்பினரும் போராடி வருகின்றனர். இதனிடையே 2014ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணிக்காக ஆடியபோது நான் இனரீதியாக துன்புறுத்தப்பட்டேன் என வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கேப்டன் டேரன் சமி குற்றஞ்சாட்டியுள்ளார்.
இனவெறிக்கு எதிரான புரிதலை சமூகத்தில் ஏற்படுத்த வேண்டும்: டேரன் சமி
இனவெறிக்கு எதிரான புரிதலை சமூகத்தில் ஏற்படுத்த வேண்டும் என வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கேப்டன் டேரன் சமி தெரிவித்துள்ளார்.
darren-sammy-gets-a-call-assured-he-operated-from-a-place-of-love
தற்போது டேரன் சமி தனது ட்விட்டர் பக்கத்தில், ''நானும் எனது சகோதரர் நிலையில் இருக்கும் ஒருவரும் இனவெறி பற்றிய புரிதலை மக்களுக்கு ஏற்படுத்த ஆரோக்கியமான உரையாடலை நடத்தியுள்ளோம். எதிர்மறை எண்ணங்களை விடுத்து இனவெறிக்கு எதிராக சமூகத்திற்கு கற்று கொடுக்க வேண்டும்'' எனப் பதிவிட்டுள்ளார்.