பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் டேனிஷ் கனேரியா. இவர் பாகிஸ்தான் அணிக்காக இதுவரை டெஸ்ட் போட்டிகளில் 261 விக்கெட்டுகளையும், ஒருநாள் போட்டியில் 15 விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருக்கிறார். இதற்கிடையில், டேனிஷ் இங்கிலாந்தில் நடைபெறும் உள்ளூர் கிரிக்கெட் தொடரில் எசெக்ஸ் அணியில் விளையாடினார். அச்சமயத்தில் டேனிஷ், ஸ்பாட் பிக்சிங் சூதாட்டத்தில் ஈடுபட்ட குற்றத்திற்காக பிசிபி அவருக்கு வாழ்நாள் தடையை விதித்தது.
இந்நிலையில் கனேரியா, தன்னை உள்ளநட்டு கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்க அனுமதி வழங்கும்படி பிசிபி மற்றும் ஐசிசியின் ஊழல் தடுப்பு பிரிவு (ஏ.சி.யு) ஆகியவற்றிற்கு தனது ட்விட்டர் மூலம் கடிதம் அனுப்பியுள்ளார்.