தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

சர்வதேச கிரிக்கெட்டிற்கு மீண்டும் திரும்பும் டேல் ஸ்டெயின்! - டேல் ஸ்டெயின் ஓய்வு

மெல்போர்ன்: கடந்த வருடம் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்த தென் ஆப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர் டேல் ஸ்டெயின், மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டிற்கு திரும்பவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

dale-steyn-set-to-return-to-international-cricket
dale-steyn-set-to-return-to-international-cricket

By

Published : Jan 3, 2020, 8:13 PM IST

கடந்த 10 ஆண்டுகளில் சிறந்த அணியை அறிவித்த அனைத்து பட்டியல்களிலும் வேகப்பந்துவீச்சாளர் டேல் ஸ்டெயின் இடம்பெற்றிருந்தார். அனைத்து நாடுகளிலும் மிகச்சிறந்த பந்துவீச்சாளராக அறியப்படும் ஸ்டெயின் கடந்த ஆண்டு டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்தார். அதையடுத்து ஐபிஎல் போட்டிகளில் ஆடியபோது காயம் காரணமாக உலகக்கோப்பைத் தொடரில் பங்கேற்க முடியவில்லை.

அதையடுத்து தென் ஆப்பிரிக்க அணியில் ஸ்டெயின் விளையாடவில்லை. அதையடுத்து டேல் ஸ்டெயின் பிக் பாஷ் போட்டிகளில் ஆடிவருகிறார். தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக தென் ஆப்பிரிக்க அணி டெஸ்ட் போட்டிகளில் ஆடிவருகிறது. அதையடுத்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் பங்கேற்கவுள்ளது.

டேல் ஸ்டெயின்

அந்த அணியில் ஸ்டெயின் ஆடுவார் எனத் தகவல் வெளியாகியது. இதுகுறித்து டேல் ஸ்டெயின் பேசுகையில், ''தென் ஆப்பிரிக்க அணிக்காக ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ஆட எப்போதும் தயாராகவே உள்ளேன். எவ்வளவு காலம் விளையாடப் போகிறேன் என்பது குறித்து சிந்திக்கவில்லை. இந்த ஆண்டு நடக்கவுள்ள உலகக்கோப்பை டி20 தொடரைக் கைப்பற்றுவதைத் தான் என்னுடைய இலக்காக வைத்துள்ளேன்.

டெஸ்ட் போட்டிகள் ஆடுவதற்கு அதிகமான உடல் உழைப்பு தேவைப்படும். டி20 வகைப் போட்டிகளுக்கு அவ்வாறு தேவையில்லை. தென் ஆப்பிரிக்க அணியில் ரபாடா மிகச்சிறப்பாக விளையாடி வருகிறார். அவர் தான் ஆட்டாக்கிங் பாணியில் செயல்பட வேண்டியுள்ளது. ஆனால் அவருக்கு உறுதுணையாக ஆடுவதற்கு அனுபவம் வாய்ந்த பந்துவீச்சாளர்கள் யாருமில்லை. அனுபவ பந்துவீச்சாளர் எப்போதும் உடனிருப்பது தேவையான ஒன்று.

அதற்கு நான் தயாராகவே உள்ளேன். தேர்வுக்குழு குறித்து யோசிக்கவில்லை. தற்போது நடைபெற்று வரும் மஞ்சி சூப்பர் லீக் தொடர் முடிவடைந்தவுடன் மிகச்சிறந்த வீரர்கள் வெளிவருவார்கள் என எதிர்பார்க்கிறேன்'' என்றார்.

இதையும் படிங்க: காலணியில் தொடங்கி ஷூவில் முடிந்த கோலியின் 10 வருட வாழ்க்கை

ABOUT THE AUTHOR

...view details