தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

'பிபிஎல்'லில் கால்பதிக்கும் வேகப்பந்துவீச்சாளர்! - உற்சாகத்தில் ரசிகர்கள்! - மேக்ஸ்வெல் தலைமையிலான மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் ஒன்பதாவது சீசன் பிக் பேஷ் டி20 தொடரில் தென் ஆப்பிரிக்காவின் ஸ்டெயின், ஆஸ்திரேலியாவின் கூல்டர் நைல் ஆகியோர் மெல்போர்ன் அணியில் இடம்பிடித்துள்ளனர்.

Steyn set to make Big Bash debut for Stars
Steyn set to make Big Bash debut for Stars

By

Published : Dec 26, 2019, 4:14 PM IST

ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் ஒன்பதாவது சீசன் பிக் பேஷ் லீக் டி20 தொடர் களைகட்டிவருகிறது. இத்தொடரில் நாளை நடைபெறவுள்ள 13ஆவது லீக் ஆட்டத்தில் மேக்ஸ்வெல் தலைமையிலான மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி, அலெக்ஸ் கேரி தலைமையிலான அடிலெய்டு ஸ்ட்ரைகர்ஸ் அணியை எதிர்த்து விளையாடுகிறது.

இதில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி இத்தொடரில் பங்கேற்ற இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்று நான்கு புள்ளிகளுடன் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது. அதேபோல் அடிலெய்டு அணி இதொடரில் ஒரு வெற்றி, ஒரு முடிவில்லை என மூன்று புள்ளிகளுடன் நான்காம் இடத்தில் உள்ளது.

தென் ஆப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர் ஸ்டெயின்

இந்நிலையில் நாளை நடைபெறவுள்ள போட்டிக்கான மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியில் ஆடும் 13 பேர் கொண்ட அணி இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் பிக் பேஷ் லீக்குக்கு அறிமுக வீரராக களமிறங்கவுள்ளார் தென் ஆப்பிரிக்காவின் ஸ்டெயின். மேலும் ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டர் கூல்டர் நைல் பெயரும் அந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ளது.

மேலும் கடந்த வாரம் நடைபெற்ற 13ஆவது சீசனுக்கான ஐபிஎல் ஏலத்தில் ஸ்டெயின் அடிப்படை விலையான இரண்டு கோடிக்கு பெங்களூரு அணியாலும் கூல்டர் நைல் எட்டு கோடிக்கு மும்பை அணியாலும் வாங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

13 பேர் கொண்ட மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி:

கிளென் மேக்ஸ்வெல் (கே), ஹில்டன் கார்ட்ரைட், பென் டங்க், பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப், டேல் ஸ்டெயின், நாதன் கூல்டர்-நைல், கிளின்ட் ஹின்ச்லிஃப், சந்தீப் லாமிச்சேனே, நிக் லார்கின், நிக் மேடின்சன், மார்கஸ் ஸ்டோய்னிஸ், டேனியல் வொரால், ஆடம் ஸாம்பா

இதையும் படிங்க: 'அவருக்கு பதிலாக வேறு யாருக்காவது அந்த வாய்ப்பு உதவும்' - அருண் லால்!

ABOUT THE AUTHOR

...view details