தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ரிக்கி பாண்டிங் உடன் கைகோர்க்கும் தாதா... ஐபிஎல் சுவாரஸ்யம்! - டெல்லி கேபிடல்ஸ்

ஐபிஎல் தொடரில் விளையாட இருக்கும் டெல்லி கேபிடல்ஸ் அணியின் ஆலோசகராக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி நியமிக்கப்பட்டுள்ளார்.

கங்குலி

By

Published : Mar 14, 2019, 8:04 PM IST

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் முடிவடைந்த நிலையில், தற்போது ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 12வது சீசன் மார்ச் 23 ஆம் தேதி தொடங்கவுள்ளது.

இதில், சென்னை, பெங்களூரு, டெல்லி, பஞ்சாப், மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட எட்டு அணிகள் பங்கேற்க உள்ளது.

பிருத்விஷா, ஸ்ரெயஸ் ஐயர், ரிஷப் பந்த், அனுமா விஹாரி போன்ற இந்திய இளம் வீரர்கள் ஒருபக்கம் இருக்க, பொல்ட் (நியூசிலாந்து), முன்ரோ( நியூசிலாந்து), கிறிஸ் மோரிஸ் (தென் ஆப்பிரிக்கா) போன்ற வெளிநாட்டு வீரர்கள் அணியில் இருந்தும் டெல்லி அணி சமீபகாலமாக ஐபிஎல் தொடரில் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறவில்லை.

இதனால், இந்த தொடரிலாவது டெல்லி அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற வேண்டும் என்பதற்காக புது புது முயற்சியில் களமிறங்கியுள்ளது. முதலில் ஹைதரபாத் அணியில் இருந்து ஷிகர் தவானை வாங்கியது. பின்னர், தனது பெயரை டெல்லி கேபிடல்ஸ் என்று மாற்றியது.

தற்போது அந்த வரிசையில், டெல்லி கேபிடல்ஸ் அணியின் ஆலோசகராக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலியை நியமித்துள்ளது. இந்த தகவலை டெல்லி அணி தனது ட்வீட்டர் தளத்தில் தெரிவித்துள்ளது.

இதனால், நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரில் கங்குலி, டெல்லி அணியின் பயிற்சியாளரான ரிக்கி பாண்டிங் உடன் சேர்ந்து பணியாற்ற உள்ளார்.

நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரில் டெல்லி அணி தனது முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதவுள்ளது. இந்தப் போட்டி மார்ச் 26 ஆம் தேதி டெல்லி பெரோஸா கோட்லா மைதானத்தில் நடைபெறவுள்ளது. முன்னதாக, கங்குலி 2008 முதல் 2010 வரை கொல்கத்தா அணிக்காகவும், பின்னர் 2011 மற்றும் 2012 இல் புனே வாரியர்ஸ் அணிக்காகவும் விளையாடினார் என்பது குறிப்பிடதக்கது.

ABOUT THE AUTHOR

...view details