இந்தியா - வங்கதேச அணிகளுக்கிடையிலான வரலாற்று சிறப்புமிக்க பகலிரவு டெஸ்ட் போட்டி கொல்கத்தாவிலுள்ள ஈடன் கார்டனில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது.
இந்நிலையில் இந்த போட்டியின் மூன்றாம் நாளான நேற்று, கொல்கத்தா மைதானத்திற்கு வெளியில், மறைமுகமாக டிக்கெட் விற்றதாக 10 பேரை அம்மாநில காவல் துறை கைது செய்துள்ளது. மேலும் அவர்களிடமிருந்து 104 டிக்கெட்டுகளையும் பறிமுதல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.