அதிதீவிர புயலான ஃபோனி, ஒடிசா மாநிலம் பூரி அருகே இன்று காலை கரையைக் கடந்தது. ஒடிசாவில் கரையைக் கடந்த ஃபோனி புயல் தற்போது மேற்கு வங்கத்தை நோக்கி நகர்ந்து வருகிறது.
ஃபோனி புயல் - விளையாட்டு நட்சத்திரங்கள் மக்களுக்கு ஆறுதல்! - ட்வீட்
ஃபோனி புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறும் வகையில் இந்திய நட்சத்திர விளையாட்டு வீரர்கள் ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர்.
ஃபோனி புயலால் ஒடிசா, மேற்கு வங்கம், ஆந்திரப்பிரதேசம், தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், ஃபோனி புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறும் வகையில் இந்திய நட்சத்திர விளையாட்டு வீரர்கள் விராட் கோலி, விரேந்திர சேவாக், ரோகித் ஷர்மா, ஹர்பஜன் சிங், சுனில் சேத்ரி உள்ளிட்டோர் ட்வீட் செய்தனர்.
புயலால் பாதிக்கப்பட்ட மாநிலங்களை சேர்ந்த மக்களின் பாதுக்காப்புக்காக பிரார்தனை செய்வதாக, அவர்கள் தெரிவித்தனர்.