தமிழ்நாடு

tamil nadu

பிரியாணி, பில்டர் காபி, தென்னிந்திய உணவு இதுவே எனக்கு போதும் - தல தோனியின் சென்னை பிணைப்பு

காரமான பிரியாணி, பில்டர் காபி, தென்னிந்திய உணவு என சென்னை குறித்து வரிசைபடுத்துகிறார் தல தோனி.

By

Published : Aug 24, 2019, 1:53 AM IST

Published : Aug 24, 2019, 1:53 AM IST

MS Dhoni

மெட்ராஸ் தினத்தை முன்னிட்டு சிஎஸ்கே வீரர்கள் சென்னை குறித்து தங்கள் மனதில் தோன்றியதை பட்டென வெளிபடுத்தியுள்ளனர். சென்னையின் 380ஆவது பிறந்தநாள் ஆகஸ்ட் 22ஆம் தேதி கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. ட்விட்டரில் ஹேஷ்டாக் தொடங்கி, பிரபலங்களின் வாழ்த்துகள், நினைவலைகள் என மெட்ராஸ் டே பெரிய அளவில் களைகட்டியது.

சென்னையின் அடையாளமாக இருக்கும் சிஎஸ்கே அணியின் வீரர்கள் சென்னை நாள் குறித்து தங்களின் வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன், சென்னை குறித்து தங்கள் மனதில் தோன்றியதை வெளிபடுத்தியுள்ளனர்.

தல தோனி

சென்னை எனக்கு எப்பவும் இரண்டாவது வீடு. எனது முதல் டெஸ்ட் மேட்சை சென்னையில்தான் விளையாடினேன். இங்குள்ள மக்களுடன் எனக்கு தனிப்பட்ட பிணைப்பு இருக்கிறது. சென்னையில் காரசாரமான பிரியாணி, பில்டர் காபி, தென்னிந்திய உணவு வகைகள் எனக்கு மிகவும் பிடிக்கும் என்று கூறியுள்ளார்.

தோனி

சுரேஷ் ரெய்னா

ஒரு கிரிக்கெட்டராக நல்ல பெயரை இங்கு எனக்கு கிடைத்துள்ளது. நல்ல கிரிக்கெட்டராக இருப்பதைவிட நல்ல மனிதராக இருப்பதுதான் முக்கியம் என்பதை சென்னை மக்களும் அவர்களது கலாசாரமும்தான் எனக்கு கற்றுக்கொடுத்தது. சென்னையில் ஈசிஆர் சாலையில், காரை ஓட்டிச் செல்வது எனக்கு மிகவும் பிடிக்கும்.

சுரேஷ் ரெய்னா

ஷேன் வாட்சன்

நான் முதல் மேட்ச் சென்னையில் ஆட நேர்ந்தபோது பாதி மைதானம் வரை மட்டுமே நிரம்பியிருந்த ரசிகர்கள் வெளிப்படுத்திய ஆரவாரம் அதிரவைத்தது. அதுபோன்றதொரு உணர்வை முன்னர் நான் அனுபவித்ததில்லை. இதைவிட பெரிய ஆச்சிரயம் ஒன்று மும்பை மைதானத்தில் விளையாடியபோது நிகழ்ந்தது. விளையாட்டை பார்க்க வந்த ரசிகர்களில் பாதி பேர் சென்னைக்கு ஆதரவு அளித்தனர்.

வாட்சன்

டுவெயின் பிராவோ

எனக்கு தனிப்பட்ட முறையில் சென்னை என் சொந்த ஊருக்கு வெளியே உள்ள வீடு. சென்னை அணியில் விளையாடியது என் வாழ்க்கையையே மாற்றியது. சென்னை வந்த பின் என் கிரக்கெட் வாழ்வில் ஏற்றம் ஏற்பட்டது. சென்னை மக்களின் கலாச்சாரம், கிரிக்கெட் மீது அவர்கள் வைத்திருக்கும் ஆர்வம் மீது அங்கம் வகிப்பதில் மகிழ்ச்சியளிக்கிறது.

பிராவோ

ரவீந்திர ஜடேஜா

2018ஆம் மீண்டும் கம்பேக் ஆனபோது ‘சிஎஸ்கே சிஎஸ்கே’ என ரசிகர்கள் ஆரவாரம் செய்தது மறக்க முடியாது. கொல்கத்தா அணிக்கு எதிராக அன்றைய போட்டியில் பெற்ற வெற்றி மறக்க முடியாத தருணம் மட்டுமல்லாமல், அவர்களின் நிபந்தனையற்ற ஆதரவுக்கு கிடைத்த பரிசு.

ரவீந்திர ஜடேஜா

ஹர்பஜன் சிங்

‘எல்லோருக்கும் வணக்கம். என்னுடைய மெட்ராஸ் ஜனங்களாம் சோக்காகிறீங்களா? நா தமிழ் ட்வீட் போட சொல்லோ நல்ல குஜாலா பேசுறீங்க. இல்லாங்காட்டி ஒரு ஹாய் ஹாலோ கூட இல்ல. நா எப்டிக்கீரன்னு கேக்ககூடாதா?’

ஹர்பஜன் சிங்

சும்மா டபாய்சேன். எல்லாம் நல்லாகிறீங்களா? தமிழ் மக்களால் நான்’ என பதிவிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details