தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

சிஎஸ்கே அணியை சேர்ந்தவர்களுக்கு கரோனா நெகட்டிவ் என தகவல் - ஐபிஎல் 2020

சமீபத்தில் கரோனா பாதித்த சிஎஸ்கே வீரர்கள் மற்றும் ஊழியர்களுக்கு, இன்று நடத்தப்பட்ட கரோனா கண்டறிதல் சோதனையின் முடிவில் அவர்களுக்கு தொற்று இல்லை என தகவல் வெளியாகியுள்ளது.

CSK players and support staff test negative for Covid-19
CSK players and support staff test negative for Covid-19

By

Published : Sep 1, 2020, 5:07 PM IST

கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தள்ளிவைக்கப்பட்டிருந்த ஐபிஎல் தொடர் இந்த மாதம் 19ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது. இதையடுத்து ஐபிஎல் அணிகளைச் சேர்ந்த வீரர்கள் கடந்த வாரம் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்று, அங்கு ஆறு நாட்கள் தனிமைப்படுத்துதலை மேற்கொண்டனர்.

இந்நிலையில், ஐக்கிய அரசு அமீரகத்திற்குச் சென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கரோனா கண்டறிதல் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இச்சோதனையின் முடிவில் அணி வீரர்கள் உள்பட 13 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டனர்.

இதையடுத்து அவர்களுக்கு இன்று (செப். 01) மீண்டும் கரோனா கண்டறிதல் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இச்சோதனையின் முடிவில் அணி வீரர்கள் மற்றும் ஊழியர்கள் என அனைவருக்கும் கரோனா தொற்று இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இருப்பினும், பாதிக்கப்பட்ட 13 பேருக்கும் மீண்டும் ஒரு முறை கரோனா கண்டறிதல் சோதனை மேற்கொண்ட பிறகே, அவர்கள் சக அணி வீரர்களுடன் பயிற்சி மேற்கொள்ள அனுமதிக்கப்படுவர் என தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க:ரெய்னா இடத்தில் தோனி... சிஎஸ்கே விற்கு ஐடியா கொடுக்கும் கம்பீர்!

ABOUT THE AUTHOR

...view details