2020ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்.4ஆம் தேதி தொடங்கி நவ.8ஆம் தேதி வரை நடக்கவுள்ளது. இதற்காக 8 ஐபிஎல் அணி வீரர்களும் தனி விமானம் மூலம் ஐக்கிய அரபு அமீரகம் பயணித்தனர்.
இதைத் தொடர்ந்து வீரர்களுக்கு நடத்தப்பட்ட கரோனா பரிசோதனையில் சென்னை அணியைச் சேர்ந்த சில வீரர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் கரோனா வைரஸ் இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதனால் சென்னை அணியைச் சேர்ந்த வீரர்கள் மீண்டும் 7 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.
இதனால் ஐபிஎல் தொடர் நடக்குமா என்ற சந்தேகம் மீண்டும் எழுந்தது. இந்த நிலையில் சென்னை வீரர்களுக்கு மீண்டும் நடத்தப்பட்ட கரோனா பரிசோதனையில், நெகட்டிவ் என முடிவுகள் வந்த நிலையில், நேற்று சென்னை வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து ஐபிஎல் போட்டிகளுக்கான அட்டவணை நீண்ட நாள்களாக வெளியிடப்படாமல் இருந்த நிலையில், இன்று வெளியிடப்பட்டது. அதில் முதல் போட்டி பரம எதிரிகளான சென்னை - மும்பை அணிகளுக்கு இடையே நடக்கவுள்ளது.
இதனைத் தொடர்ந்து சென்னை அணி செப்.22ஆம் தேதி ராஜஸ்தான் அணியையும், செப்25ஆம் தேதி டெல்லி அணியையும், அக்.2ஆம் தேதி ஹைதராபாத் அணியையும், அக்.4ஆம் தேதி பஞ்சாப் அணியையும், அக்.7ஆம் தேதி கொல்கத்தா அணியையும், அக்.10ஆம் தேதி பெங்களுரூ அணியையும், அக்.13ஆம் தேதி ஹைதராபாத் அணியையும், அக்.17ஆம் தேதி டெல்லி அணியையும், அக்.19ஆம் தேதி ராஜஸ்தான் அணியையும், அக்.23ஆம் தேதியும் மும்பை அணியையும், 25ஆம் தேதி பெங்களுரூ அணியையும், 29ஆம் தேதி கொல்கத்தா அணியையும், 1ஆம் தேதி அணியையும் பஞ்சாப்பையும் எதிர்கொள்கிறது.
இதையும் படிங்க:மாஸ்க் போடாமல் இருந்த ரொனால்டோ - அறிவுரை சொன்ன பெண் ஊழியர்!