கோவிட் -19 பெருந்தொற்றுக் காரணமாக இந்தியாவில் இதுவரை 11ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டும், 300க்கும் அதிகமானோர் உயிரிழந்தும் உள்ளனர். மேலும் இதனைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக மே 3ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்திய அணியின் நட்சத்திர வீரரான சஞ்சு சாம்சன், கேரள காவல்துறையினருடன் இணைந்து பொதுமக்களுக்கு கரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் காணொலியில் நடித்துள்ளார்.
கேரள காவல்துறையினரால் வெளியிடப்பட்டுள்ள கரோனா விழிப்புணர்வு கணொலியில், கோவிட்-19 பெருந்தொற்றால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கின் போது விளையாட்டுக்களைத் தவிர்த்து வீட்டிலேயே இருப்போம். இது நம்முடைய முன்னெச்சரிக்கைகான நேரம், அரசு அறிவுறுத்தலை பின்பற்றி நடப்போம். மிகுந்த எச்சரிக்கையுடன் இந்த கரோனாவை ஒழிப்போம். நாம் ஒத்துழைத்தால் கிரிக்கெட் விளையாடுவதற்கான நேரம் மிக விரைவில் வரும் என்று சஞ்சு சாம்சன் கூறுவதுபோல் படமாக்கப்பட்டுள்ளது.
கேரள காவல்துறையால் வெளியிடப்பட்ட கரோனா விழிப்புணர்வு காணொலி கேரள காவல்துறையினரின் இந்த முயற்சிக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் ஆதரவும், பாராட்டுக்களும் குவிந்து வருகின்றன. மேலும் இந்த காணொலி கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியிலும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதையும் படிங்க:நாங்கள் வாழ்வதற்கு இந்தியா தேவையில்லை: ஷ்சன் மணி