இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டரான பென் ஸ்டோக்ஸின் தந்தை ஜெரால்ட் கெட் ஸ்டோக்ஸ் (65) காலமானார். இவர் முன்னாள் ரக்பி வீரர். கடந்த சில மாதங்களாக மூளை புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த கெட் ஸ்டோக்ஸ், நியூசிலாந்திலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தந்தையின் சிகிச்சையின்போது உடனிருக்க வேண்டும் என்பதால் கடந்த ஆகஸ்ட் மாதம் பாகிஸ்தானுக்கு எதிரான தொடரிலிருந்து இடையிலேயே விலகினார் பென் ஸ்டோக்ஸ். இதன் காரணமாகத்தான், கடந்த ஐபிஎல் தொடரில் பாதியில் தான் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இணைந்தார்.