தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ஐபிஎல் தொடருக்கு முன் தென் ஆப்பிரிக்கா - வெஸ்ட் இண்டீஸ் தொடர்? - வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம்

ஐபிஎல் தொடருக்கு முன் வருகிற செப்டம்பர் மாதத்தில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக கிரிக்கெட் தொடரை நடத்த வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் விருப்பம் தெரிவித்துள்ளது.

Cricket West Indies hopes to host South Africa in September
Cricket West Indies hopes to host South Africa in September

By

Published : Jul 25, 2020, 7:34 PM IST

இந்தாண்டு நடைபெறவிருந்த உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி ரத்துசெய்யப்படுவதாக ஐசிசி அறிவித்த உடனே, ஐபிஎல் போட்டிகளை நடத்துவதற்கான பணியில் பிசிசிஐ களமிறங்கியது. இதையடுத்து ஐபிஎல் போட்டிகள் செப்டம்பர் 19ஆம் தேதி தொடங்கி நவம்பர் 8ஆம் தேதிவரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இத்தொடருக்கு முன்னதாக வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம், தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக ஐந்து டி20 போட்டிகள் அல்லது 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரை நடத்த முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து அவ்வாரியத்தின் தலைமை நிர்வாகி ஜானி கிரேவ் கூறுகையில், "செப்டம்பர் மாதத்தில் தென் ஆப்பிரிக்க அணியுடன் வெஸ்ட் இண்டீஸ் அணி ஐந்து டி20 போட்டிகள் அல்லது இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடும்.

மேலும், இந்தத் தொடரானது ஐபிஎல் தொடருக்கு முன்னதாக நடைபெறும். ஏனெனில் ஐபிஎல் தொடருக்கான ஒப்பந்தங்களில் இரு அணியைச் சேர்ந்த வீரர்களும் உள்ளதால், இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்" என்றார் என்று தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details