2028ஆம் ஆண்டு நடக்கவுள்ள ஒலிம்பிக் விளையாட்டுகளில் கிரிக்கெட்டை சேர்ப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு முன்னதாக 2022ல் பர்மிங்ஹாம் காமன்வெல்த் போட்டியில் மகளிருக்கான டி20 கிரிக்கெட் போட்டிகளை நடத்தக் காமன்வெல்த் அமைப்பு திட்டமிட்டுள்ளது.
இதற்கு முன்பாக மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் 1998ஆம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் ஆண்களுக்கான 50 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றது. அப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி தென்னாப்ரிக்கா அணி தங்கபதகத்தை வென்றது.
அதன் பின் காமன்வெல்த் விளையாட்டுகளில் நேரம் காரணமாக கிரிக்கெட் போட்டிகளுக்கு அணுமதி வழங்காமல் இருந்து வந்தது. இந்நிலையில் தற்போது மீண்டும் கிரிக்கெட்டிற்கு காமன்வெல்த் அமைப்பு அனுமதியளித்துள்ளது. இதில் மகளிருகான டி20 போட்டிகளாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 8 அணிகள் பங்கேற்கும் எனவும், அனைத்து போட்டிகளும் பர்மிங்ஹாமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெறுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.