ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடரிலும் விளையாடி வருகிறது. நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மூன்றாவது டெஸ்ட் போட்டி பகலிரவு ஆட்டமாக நடைபெறும் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்திருந்தது. ஆனால் அப்போட்டி தற்போது முதலாவது டெஸ்ட் போட்டியாக வருகிற டிசம்பர் 17ஆம் தேதி அடிலெய்டில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், ஒளிபரப்பு ஒப்பந்தத்தை மீறி ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் போட்டி அட்டவணையை மாற்றியதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் மீது ’சேனல் 7’ தொலைக்காட்சி நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது.