கோவிட்-19 பெருந்தொற்றுக் காரணமாக உலகம் முழுதும் 25 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டும், ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தும் உள்ளனர். இப்பெருந்தொற்றின் அச்சுறுத்தலை தடுக்கும் வகையில் பல நாடுகள் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன. மேலும் இதன் காரணமாக பல்வேறு விளையாட்டுப் போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் விளையாட்டு போட்டிகள் ஏதும் நடைபெறாமல் உள்ளதால் கிரிக்கெட் வாரியங்களில் பணிபுரிந்தவர்களுக்கு சரியான ஊதியத்தை கொடுக்க முடியாமல் வாரியங்கள் திணறி வருகின்றன. தற்போது இதே சூழலில் தான் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியமும் சிக்கித்தவித்து வருகிறது. அவ்வாரியத்தில் பணியாற்றி வந்த ஊழியர்களுக்கு 20 முதல் 80 விழுக்காடு ஊதியப்பிடித்தம் செய்துவருகின்றது. அதேசமயம் ஒரு சில ஊழியர்களை ஜூன் மாதம் வரை இடை நீக்கம் செய்தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.