தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

எந்த பாகுபாட்டிற்கும் விளையாட்டில் இடமில்லை; கிரிக்கெட்டில் திருநங்கைகள் பங்கேற்கலாம்..! - Cricket Australia

சிட்னி:  திருநங்கைகள் மற்றும் பாலின வேறுபாடு உள்ளவர்கள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கும் வழிகாட்டுதலை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

திருநங்கைகள்

By

Published : Aug 8, 2019, 3:04 PM IST

இதுகுறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2018ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முக்கிய பங்குதாரர்களுடன் கலந்தாலோசிக்கத் தொடங்கி, ஆஸ்திரேலியா சமூகத்தில் வாழும் அனைத்து தரப்பினரும் கிரிக்கெட்டில் பங்கேற்கும் வகையில் கிரிக்கெட் கொள்கை மற்றும் வழிகாட்டுதல்களை உருவாக்கியுள்ளது. இது பாலின அடையாளத்திற்கு ஏற்ப கிரிக்கெட்டில் பங்கேற்க விரும்பும் வீரர்களுக்கு ஆதரவளிக்கும்.

பாலின அங்கீகாரத்தின் அடிப்படையில் கிரிக்கெட்டின் கொள்கை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தகுதிகளுடன் ஒத்துப்போகிறது. திருநங்கைகள் மற்றும் பாலின வேறுபட்ட கிரிக்கெட் வீரர்களுக்கு அவர்களின் பாலின அடையாளத்துடன் ஒத்துப்போனால் சர்வதேச போட்டிகளில் எவ்வாறு போட்டியிட முடியும் என்பதற்கான வழிகாட்டுதலை வழங்குகிறது. கூடுதல் நடவடிக்கையாக, சிறப்பான போட்டியை உறுதிப்படுத்துவதற்காக நிபுணர் குழுவு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த வழிகாட்டுதல்கள் விளையாட்டின் அடிமட்டத்தில் பாதிக்கப்படும் பாலின வேறுபாடுள்ள வீரர்களுக்கு துன்புறுத்தல் மற்றும் பாகுபாடின்றி பாதுகாப்பான சூழலை உருவாக்கும்.

இதுகுறித்து ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரி கெவின் ராபர்ட்ஸ் பேசுகையில், திருநங்கை என்பதால் பல இடங்களில் அவர்கள் ஒதுக்கப்படுகின்றனர். நம் சமூகத்தில் உள்ள அனைவரும் கிரிக்கெட்டின் கலாச்சாரத்தால் மகிழ்வடைவதை உறுதி செய்கிறோம்.

வலிமை, சகிப்புத்தன்மை மற்றும் உடலமைப்பு ஆகிய காரணிகள் பொருந்தி இருப்பதால், இந்த கொள்கைகளை செயல்படுத்துவதன் மூலம் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு, திருநங்கைகள் மற்றும் பாலின வேறுபாடுள்ள வீரர்கள் உயரடுக்கு கிரிக்கெட்டில் பங்கேற்க ஆதரிக்கப்படுவார்கள்.

கிரிக்கெட்டில், திருநங்கைகள் மற்றும் பாலின வேறுபட்ட வீரர்களின் பங்கேற்பை ஊக்குவிப்பதற்காக கிளப்கள் மற்றும் சங்கங்களுக்கு வலுவான வழிகாட்டுதல்களை வழங்குகின்றன. எந்த பாகுபாட்டிற்கும் விளையாட்டில் இடமில்லை என்பதை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் உறுதி செய்துள்ளது எனத் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details