உலகக்கோப்பைத் தொடர் முடிந்ததிலிருந்து தோனி, ஓய்வு முடிவு குறித்து எப்போது அறிவிப்பார் என பலரும் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இது குறித்து கருத்துக் கூறிய முன்னாள் அணி தேர்வாளர் சஞ்சய் ஜட்கலே, ”தோனி சிறிதும் சுயநலமில்லாமல் இந்திய அணிக்கு ஆடிய மிகச்சிறந்த வீரர். என்னைப் பொறுத்தவரையில் தற்போது உள்ள இந்திய அணியில் விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேனாக தோனியின் இடத்தை நிரப்ப எந்த வீரரும் இல்லை.”
வெஸ்ட் இண்டீஸ் உடனான தொடரில் தோனியைத் தேர்ந்தெடுப்பார்களா? மாட்டார்களா? அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டதற்குப் பதிலளித்த ஜட்கலே,
எப்போது ஓய்வு முடிவை அறிவிக்க வேண்டுமென தோனிக்குத் தெரியும். இருந்தாலும் சச்சினின் ஓய்வு முடிவு குறித்து அவரிடம் கேட்டு பிசிசிஐ முடிவு எடுத்தது போல தோனியின் முடிவு என்னவென்று தேர்வாளர்கள் அவரிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும். மேலும் தேர்வாளர்கள் வருங்காலத்தில் தோனியிடம் அவர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் எனவும் தெளிவாகக் கூற வேண்டும் என்றார்.