உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் இந்திய அணி நியூசிலாந்து அணியுடன் போராடித் தோல்வியுற்றது. கடைசி வரை போராடிய தோனி துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட் ஆனார்.
'தல' தோனி கண் கலங்கினாரா ?- வைரலாகும் வீடியோ - தோனி
தோனி அவுட்டான பிறகு அவர் கண் கலங்குவது போன்ற காட்சி ஒன்று இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.
தோனி
தோனிக்கு இந்த உலகக்கோப்பைதான் கடைசி உலகக்கோப்பை என்பதால் இந்திய அணி இந்த உலகக்கோப்பையை வென்று அவருக்கு பரிசளிக்கும் என எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
இந்நிலையில், தோனி ரன் அவுட் ஆன உடன் கண் கலங்குவது போன்ற வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. ரசிகர்கள் அனைவரும் அந்த வீடியோவை சோகத்துடன் பகிர்ந்துவருகின்றனர்.