தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

கரோனா பாதிப்பு: சச்சின் மருத்துவமனையில் அனுமதி - சச்சின் கரோனா

கரோனா பாதிப்பால் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்ட கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், ஆறு நாள்கள் கழித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

COVID-19
சச்சின்

By

Published : Apr 2, 2021, 12:52 PM IST

கடந்த மார்ச் 27ஆம் தேதி இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது. இதனையடுத்து, அவர் வீட்டிலேயே தன்னைத் தனிமைப்படுத்திக்கொண்டார்.

இந்நிலையில், மருத்துவர்களின் ஆலோசனையின்படி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சச்சின் டெண்டுல்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து அவரது ட்வீட்டில், "அனைவரின் பிரார்த்தனைகளுக்கும் நன்றி. மருத்துவ அறிவுரை காரணமாக ஏகப்பட்ட முன்னெச்சரிக்கைகளுடன் நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். இன்னும் சில நாள்களில் வீடு திரும்புவேன் என்று நம்புகிறேன். கவனமாக இருங்கள். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இன்று 2011 உலகக்கோப்பையை வென்ற நாள். அதை நினைவுகூர்ந்த சச்சின் தனது ட்வீட்டில், "உலகக்கோப்பையை வென்று 10 ஆண்டுகள் ஆகிவிட்டன, இந்தியர்களுக்கும் இந்திய அணிக்கும் 10ஆம் ஆண்டு மகிழ்ச்சி கொண்டாட்ட நாளுக்கான வாழ்த்துகள்" எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட அமிதாப் பச்சன்!

ABOUT THE AUTHOR

...view details