தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

‘சிவாஜி தி பாஸ்’ புதிய லுக்கில் அசத்தும் கபில்தேவ்! - கருப்பு நிர பிளேஸர் மற்று கருப்பு கண்ணாடி

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட, மொட்டை தலையுடன் கருப்பு பிளேஸர் மற்றும் கண்ணாடி அணிந்து கெத்தாக இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

COVID-19: Kapil Dev sports new look amid lockdown, shaves head
COVID-19: Kapil Dev sports new look amid lockdown, shaves head

By

Published : Apr 21, 2020, 9:46 AM IST

கோவிட்-19 பெருந்தொற்றின் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், இம்மாதம் 15ஆம் தேதி தொடங்கயிருந்த ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசன் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பெருந்தொற்றின் தாக்கத்தினால் பல்வேறு துறை பிரபலங்களும் தாங்களாகவே சுயத்தனிமைப்படுத்துதலை மேற்கொண்டு வருகின்றனர். ]

இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், ஆல் ரவுண்டர்களின் ஜாம்பவானுமான கபில் தேவ், மொட்டைத் தலையுடன் இருக்கும் புதிய புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அந்தப் புகைப்படத்தில் அவர் கருப்பு நிற பிளேஸர், கருப்பு கண்ணாடி அணிந்து கெத்தான போஸ் கொடுத்துள்ளார்.

கபில் தேவ்
‘சிவாஜி தி பாஸ்’ கபில் தேவ்

கபில்தேவின் இந்தப் புகைப்படம் அவரது ரசிகர்களால் இணையத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது. இதற்கு முன், இந்திய அணியின் பேட்டிங் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், தனது முடியை திருத்துவது போன்று வெளிவந்த புகைப்படம் இணையத்தில் வைரலானது.

இதையும் படிங்க:ஜாம்பவானை முடி திருத்துபவராக மாற்றிய கரோனா!

ABOUT THE AUTHOR

...view details