கோவிட்-19 பெருந்தொற்றினால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இங்கிலாந்து முன்னிலையில் உள்ளது. அந்நாட்டில் இதுவரை ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டும், 19ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும் உள்ளனர். மேலும் அந்நாட்டில் ஜூலை மாதம் வரை எந்தவித கிரிக்கெட் விளையாட்டுப் போட்டிகளும் நடைபெறாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள தன் நாட்டு மக்களுக்கு உதவ, இங்கிலாந்து அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன், தன் ஓய்வுக்கு முன்னதாக விளையாடிய போட்டியின் போது பயன்படுத்திய ஜெர்சி, பேட், கிளவுஸ் உள்ளிட்டவைகளை தனது கையொப்பமுடன் ஏலத்தில் விற்பதாக அறிவுத்துள்ளார்.