கோவிட்-19 பெருந்தொற்றுக் காரணமாக உலகம் முழுவதும் இதுவரை மூன்றரை லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டும், 16ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தும் உள்ளனர். இந்நிலையில் இந்தியாவின் பல பகுதிகளில் இப்பெருந்தொற்று காரணமாக 144 தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளன.
இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர தொடக்க வீரரும், டெல்லியின் கிழக்கு தொகுதி நாடளுமன்ற உறுப்பினருமான கவுதம் கம்பீர், கோவிட் பெருந்தொற்றால் பாதிப்படைந்தவர்களுக்குத் தேவையான மருத்துவ உபகரணங்களை வாங்க தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.50 லட்சத்தை டெல்லி அரசு மருத்துவமனைகளுக்கு வழங்குவதாகத் தெரிவித்துள்ளார்.