கரோனா பெருந்தொற்றுக் காரணமாக உலகம் முழுவதும் இதுவரை 45 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டும், மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும் உள்ளனர். மேலும் இப்பெருந்தொற்றின் அச்சுறுத்தலினால் ஒலிம்பிக் உள்பட அனைத்து வகையான விளையாட்டுப் போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டு, விளையாட்டு வீரர்கள் தனிமைப்படுத்துதலை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் இப்பெருந்தொற்றால் அதிக பாதிப்பை சந்தித்த நாடுகள் பட்டியலில் நான்காம் இடத்தைப் பெற்றுள்ள இங்கிலாந்தில், கடுமையான ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டும், கிரிக்கெட் உள்ளிட்ட அனைத்து விளையாட்டுப் போட்டிகளையும் ஜூன் 30ஆம் தேதி வரை ஒத்திவைத்தும் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம், இங்கிலாந்து வீரர்கள் தங்களது தனிப்பட்ட திறன் அடிப்படையிலான பயிற்சிகளை மேற்கொள்ளவதற்காக, சில கடுமையான நெறிமுறைகளுடன் கூடிய அனுமதியை வழங்கியுள்ளது. இதன் மூலம் அடுத்த வாரத்திலிருந்து வீரர்கள் தங்களது பயிற்சிகளை மேற்கொள்ளாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து இசிபி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கரோனா பெருந்தொற்றிற்கு மத்தியில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம், அரசு அறிவுறுத்தியுள்ள கடுமையான நெறிமுறைகளுடன் கூடிய பயிற்சிகளை வீரர்கள் மேற்கொள்ள அனுமதியளிக்கிறது. வீரர்கள் பயிற்சிகளை மேற்கொள்ளும் போது அரசாங்கத்தின் வழிகாட்டுதலுக்கேற்ப விதிமுறைகளை பின்பற்றும் படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் அவர்களின் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கண்காணிக்கும் என்பதையும் உறுதிசெய்கிறோம்’ என்று தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க:குழந்தை தனமாக நடந்துகொண்டார் கோலி - நோட்புக் செலிபிரேஷன் குறித்து கெஸ்ரிக் வில்லியம்ஸ்