தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

தொண்டு நிறுவனத்திற்கு நிதி திரட்ட மாரத்தான் ஓடும் பென் ஸ்டோக்ஸ்...!

டெல்லி: தேசிய சுகாதார சேவை மையம், தேசிய குழந்தைகளுக்கான கிரிக்கெட் தொண்டு நிறுவனம் ஆகியவற்றுக்கு நிதி திரட்டும் நோக்கில் இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் அரை மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்கவுள்ளார்.

covid-19-ben-stokes-to-run-half-marathon-to-raise-funds-for-nhs
covid-19-ben-stokes-to-run-half-marathon-to-raise-funds-for-nhs

By

Published : May 5, 2020, 11:28 AM IST

கரோனா வைரஸ் காரணமாக உலகின் பல்வேறு நாடுகளிலும் விளையாட்டுப் போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் விளையாட்டு வீரர்கள் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். இதனிடையே இங்கிலாந்து முன்னாள் நட்சத்திர ஆல் - ரவுண்டர் ஆண்ட்ரூ பிளிண்டாஃபிற்கு பின் விஸ்டன் கிரிக்கெட்டர் ஆஃப் தி இயர் விருதை இங்கிலாந்து ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் சமீபத்தில் வென்றார்.

தற்போது தேசிய சுகாதார சேவை மையம், தேசிய குழந்தைகள் கிரிக்கெட் தொண்டு நிறுவனம் ஆகியவற்றுக்கு நிதி திரட்டும் நோக்கில் இங்கிலாந்து ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் அரை மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்கவுள்ளார்.

இதுகுறித்து அவர் பதிவிட்ட ட்வீட்டில், '' எப்போதும் மாரத்தானில் பங்கேற்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். ஆனால் இதுவரை அதை செய்ய முடியவில்லை. கரோனாவால் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு காலத்தில் இதனை செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது. நான் இதனை செய்தால், அவர்கள் நிதி திரட்டுவதற்கும் உதவியாக இருக்கும்.

கிரிக்கெட் கார்டன் மாரத்தானுக்கு மக்கள் நிதியளிக்க ஊக்குவிக்கும் முயற்சியாக இருக்கும். மாரத்தான் ஓடுவதற்கு இதுவரை பயிற்சி எடுக்கவில்லை. நான் இதுவரை 8 கிமீ வரை ஓடியுள்ளேன். மாரத்தானில் ஓடுவேன் என்ற நம்பிக்கை உள்ளது'' என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:இந்திய பந்துவீச்சாளர்களுக்கு பயிற்சியளிக்க விருப்பம்- அக்தர்!

ABOUT THE AUTHOR

...view details